2025 மே 17, சனிக்கிழமை

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் - ஆதிவாசிகளின் தலைவர் சந்திப்பு

Thipaan   / 2016 டிசெம்பர் 28 , மு.ப. 09:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம்

தெஹியத்தகண்டி, ஹேனானிகல பகுதியைச் சேர்ந்த ஆதிவாசிகளின் தலைவர் ஊறு வறியபத்தலாகே கல் பண்டியத்தோ, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீரை, இன்று (28) சந்தித்தார்.

இச்சந்திப்பின் போது, தமது கிராமத்துக்குச் செல்லும் பிரதான வீதியைப் புனரமைத்துத் தருமாறு வேண்டுகோள் விடுத்ததையடுத்து, வீதி அபிவிருத்தி அமைச்சர் ஆரியவத்தி கலப்பதியின் கவனத்துக்கு, சுகாதார அமைச்சர் கொண்டு வந்தார்.

இதொடர்பில், மத்திய அரசாங்கத்துடன் பேசி, கூடிய விரைவில் வீதியைப் புனரமைத்துத் தருவதற்குரிய நடவடிக்கையை எடுப்பதாக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .