தீஷான் அஹமட் / 2018 ஜூலை 18 , பி.ப. 03:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
சம்பூர், பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சேனையூர் கரைச்சைப் பகுதியை அண்டிய காட்டுப்பகுதியில் மறைமுகமாக இயங்கிவந்த கசிப்பு உற்பத்தி நிலையத்தினை நேற்று(17) மாலை சுற்றி வளைத்து தேடுதல் நடாத்திய போது 4500 மில்லி லீற்றர் கசிப்பு சாராயம் கைப்பற்றப்பட்டதுடன், 56 வயதுடைய சந்தேக நபரையும் கைது செய்துள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த காட்டுப்பகுதியில், சட்டவிரோத கசிப்பு நிலையமொன்று இயங்குவதாக சம்பூர் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையிலேயே இச்சுற்றி வளைப்பை மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபரை, சம்பூர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், மூதூர் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.
21 minute ago
25 minute ago
4 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
25 minute ago
4 hours ago
9 hours ago