Suganthini Ratnam / 2017 ஜனவரி 23 , மு.ப. 04:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அப்துல்சலாம் யாசீம்
திருகோணமலை, அலஸ்தோட்டம் பகுதியில் கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கணவன், மனைவி மற்றும் இளைஞர் ஒருவரையும் ஞாயிற்றுக்கிழமை (22) மாலை கைதுசெய்ததுடன், இவர்களிடமிருந்து அக்கஞ்சாவைக் கைப்பற்றியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கணவன், மனைவி ஆகிய இருவரும் கஞ்சாவை விற்பனை செய்ய முயல்வதாக தமக்குக் கிடைத்த தகவலை அடுத்து, குறித்த இடத்துக்குச் சென்று விசாரணை செய்தபோது, இவர்களிடம் ஒவ்வொரு கிலோகிராம் கஞ்சாவாகப் பொதி செய்யப்பட்ட இரண்டு கஞ்சாப் பொதிகள் இருந்தமை தெரியவந்தது.
மேலும், இச்சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்போது, இளைஞர் ஒருவரிடமும் 50 கிராம் கஞ்சா இருந்தமை தெரியவந்தது.
முல்லைதீவு, புதுக்குடியிருப்பைச் சேர்ந்த 38 வயதுடைய கணவரையும் 29 வயதுடைய மனைவியையும் திருகோணமலை, கும்புறுப்பிட்டியைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞரையுமே கைதுசெய்ததாகவும் பொலிஸார் கூறினர்.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago