Niroshini / 2016 ஓகஸ்ட் 13 , மு.ப. 06:23 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்
திருகோணமலை - கந்தளாய் பிரதேசத்தில் அரைகிலோ கேரளா கஞ்சாவை வைத்திருந்த ஒருவரை இம்மாதம் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் எச்.ஜி.தம்மிக்க நேற்று வெள்ளிக்கிழமை(12) உத்தரவிட்டார்.
கந்தளாய், லைட்வீதியைச் சேர்ந்த 38 வயதுடைய ஒருவரே இவ்வாறு விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளார்.
வியாழக்கிழமை (11) இரவு, குறித்த சந்தேக நபர் வீட்டில் கஞ்சா வைத்திருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார, சந்தேக நபரின் வீட்டினை சோதனை மேற்கொண்டபோதே அரை கிலோ கேரளா கஞ்சா வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago