Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Princiya Dixci / 2016 டிசெம்பர் 29 , மு.ப. 04:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
தீஷான் அஹமட்
திருகோணமலை, சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடல்பரப்பில் மதுபோதையில் நீராடிய குடும்பஸ்தர் ஒருவர், புதன்கிழமை (28) மாலை உயிரிழந்துள்ளதாக, சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.
மீன் கொண்டு வருவதாக, மனைவியிடம் கூறிவிட்டுச் சென்ற குறித்த நபர், அளவுக்கதிகமான மதுபோதையில் காரணமாக, கடற்கரையிலிருந்து 200 மீற்றருக்கும் அதிகமான தூரம் நீந்துச் சென்று நீராடிய போது, கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக, பொலிஸ் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர், சம்பூர் பகுதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான கணபதிப்பிள்ளை வரதகுணராசா (வயது 50) எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு உடன் விரைந்து சென்ற மூதூர் திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.ஜே.நூறுல்லா, குறித்த நபர், நீரில் மூழ்கி உயிரிழந்ததாக அறிக்கை வழங்கி, சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைத்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
16 May 2025
16 May 2025