2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

கடலில் நீராடியவர் உயிரிழப்பு

தீஷான் அஹமட்   / 2018 ஏப்ரல் 16 , பி.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, சேருநுவர, லங்காப்பட்டுண கடல் பகுதியில் உறவினர்கள், நண்பர்களுடன் நீராடிக் கொண்டிருந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 45 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர், நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் என, சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (15) விடுமுறை தினமென்பதால் குறித்த நபர், லங்காப்பட்டுண கடலுக்குச் சென்று நீராடிப் பொழுதை போக்கிக் கொண்டிருந்த போதே, இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதேவேளை, கடலில் நீராடும் போது, இவர் அதிக மதுபோதையில் காணப்பட்டுள்ளாரென, பொலிஸ் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X