அப்துல்சலாம் யாசீம் / 2018 மே 17 , பி.ப. 05:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, ரொட்டவெவ பகுதியில் பாடசாலை மாணவர்கள் இருவருக்கு பீடி விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு, பொலிஸார் நேற்று (16) எச்சரிக்கை செய்து விடுவித்துள்ளனர்.
13 வயதுடைய இம்மாணவர்கள், பீடியை வாங்கிச் சென்று, பாடசாலை வளாகத்தில் அதைப் புகைத்துக் கொண்டிருக்கும் போது, பொலிஸாரால் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, மாணவர்களிடம் பீடி எங்கிருந்து பெறப்பட்டது என விசாரணை செய்த போது, குறித்த கடையில் வாங்கியதாகத் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, மாணவர்கள் இருவரும், பீடியில் கஞ்சாவையும் கலந்துள்ளனர் என, பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடை உரிமையாளரை, ரொட்டவெவ பொலிஸ் நிலையத்துக்கு வரவழைத்து, சிறுவர்களுக்கு இனிவரும் காலங்களில் பீடி, சிகரெட் விற்றமை தெரியவந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென, பொலிஸார் எச்சரித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .