2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

கத்திக் குத்தில் ஒருவர் காயம்

தீஷான் அஹமட்   / 2018 மே 30 , பி.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செல்வநகர் பிரதேசத்தில் இடம்பெற்ற கத்திக்குத்தில், 49 வயது மதிக்கத்தக்க நபரொருவர் படுகாயமடைந்த நிலையில், மூதூர் தள வைத்தியசாலையில், நேற்று (29) மாலை அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபரை, தான் கத்தியால் குத்தியதாகக் கூறி, 38 வயது நபரொருவர் கத்தியுடன், சேருநுவரப் பொலிஸில் சரணடைந்துள்ளார்.

குடும்பத் தகராறு காரணமாக இருவருக்குமிடையில் ஏற்பட்ட கைகலப்பின் பின்னரே, கத்தியால் குத்தியதாகத் தெரியவந்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை, சேருநுவரப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X