Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Editorial / 2018 ஏப்ரல் 05 , பி.ப. 03:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம், எப்.முபாரக்
கந்தளாய் 97ஆம் கட்டை பழக்கடைக்கருகில், கரடி தாக்கிய இருவர், படுகாயமடைந்த நிலையில், இன்று (05), காலை கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு படுகாயமடைந்தவர்கள், தம்பலகாமம், சிறாஜ் நகரைச் சேர்ந்த எம்.நஸார்தீன் (42வயது) மற்றும் எம்.நபீல் (24வயது) எனவும் தெரியவருகின்றது.
கடந்த சில தினங்களாக கந்தளாய் பிரதேசத்தில், காட்டு யானைகளின் தொல்லை அதிகரித்து வந்ததோடு, வீடுகளில் வளர்த்து வந்த நாய்க்குட்டிகளை புலிகள் கொண்டு செல்வதாக கண்டறியப்பட்டது. இதேவேளை, இன்றைய தினம், குறித்த பகுதிக்குள், கரடித் தாக்குதலும் இடம்பெற்றுள்ளது.
மேலும், யானை, புலி மற்றும் கரடி போன்றவற்றின் வருகையினால், அப்பகுதிமக்கள் பெரிதும் அச்சத்தில் உள்ள நிலையில், இது குறித்து, வனவிலங்கு அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தியும், இதுவரை, எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையெனவும் பிரதேச மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago