Editorial / 2018 மே 27 , பி.ப. 03:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அப்துல்சலாம் யாசீம்
திருகோணமலை மாவட்டத்தில் புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள உள்ளூராட்சிமன்றங்களின் பிரதிநிதிகளுக்கான கலந்துரையாடலும் ஆலோசனைக்கூட்டமும் நாளை (28) காலை 10.00மணிக்கு சம்பூர் கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
கிழக்கு மாகாண உள்ளூராட்சி திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக்கலந்துரையாடலில் மன்றங்களின் நடவடிக்கைகள் சம்பந்தமாகவும் சபைகளின் ஒழுங்கு விதிமுறைகள் சம்பந்தமாகவும், உள்ளூராட்சி மன்றங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை எவ்வாறு தீர்ப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பபடவுள்ளதாக கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.வை.சலீம் தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலில் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
44 minute ago
48 minute ago
5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
48 minute ago
5 hours ago
9 hours ago