2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

கிண்ணியா நகரசபையின் முதலமர்வு நாளை

Editorial   / 2018 ஏப்ரல் 26 , பி.ப. 02:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 ஹஸ்பர் ஏ ஹலீம்
கிண்ணியா நகரசபையின் முதலாவது அமர்வு, நாளை (27) காலை 8 மணிக்கு, கிண்ணியா நகரசபையின் விசேட சபை அமர்வு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
தவிசாளர் எஸ்.எச்.எம்.நளீம் தலைமையில் இந்த அமர்வு இடம்பெறவுள்ளதென, கிண்ணியா நகர சபையின் செயலாளர் என்.எம்.நௌபீஸ் தெரிவித்தார்.
இதன்போது, பல்வேறு பிரேரணைகள், திட்ட முன்மொழிவுகள், ஒவ்வொரு சபை உறுப்பினர்களாலும் முன்வைக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது. எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள், கிண்ணியா நகர எல்லை மக்களின் எதிர்பார்ப்புகள் தொடர்பிலும், இதன்போது ஆராயப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X