Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 மே 03 , பி.ப. 02:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
தீஷான் அஹமட், எப்.முபாரக், ஹஸ்பர் ஏ ஹலீம், ஏ.ஆர்.எம்.றிபாஸ்
கிழக்கு மாகாண சபையின் சட்ட அதிகாரியாக, மூதூரைச் சேர்ந்த சட்டத்தரணி முஹம்மட் லத்தீப் பைசர், கிழக்கு மாகாண சபையின் பிரதம செயலாளர் அலுவலகத்தில், நேற்று (02) தனது கடமையைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
குறித்த நியமனம், கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவால் 27.7.2017ஆம் திகதி நடத்தப்பட்ட நேர்முகத்தேர்வின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.
சட்டத்தரணி பைசர், ஆரம்பக்கல்வியை, மூதூர் அல்-ஹிலால் மத்திய கல்லூரியிலும் இடைநிலை மற்றும் உயர்தரக் கல்வியை, திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரியிலும் பூர்த்தி செய்துள்ளார்.
இவர், விஞ்ஞானத்துறை மற்றும் சட்டத்துறை பட்டதாரியும் ஆவார். கொழும்பு பல்கலைக்கழகத்தில் மனிதவள முகாமைத்துவத் துறையில் பட்டப்பின் படிப்பையும் பூர்த்தி செய்து, அதேதுறையில் முதுமாணிக் கற்கையைப் பூர்த்தி செய்து, ஆய்வு நிலை மாணவராக இருந்துவருகின்றார்.
சமூகச் செயற்பாட்டாளரான இவர், மூதூர் மஜ்லிஸூஸ் ஷூரா சபையின் பொதுச் செயலாளராகவும் சேவையாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
15 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
2 hours ago
3 hours ago