அப்துல்சலாம் யாசீம் / 2018 ஒக்டோபர் 02 , பி.ப. 07:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்கு மாகாண சபையில்அபிவிருத்தி செயற்பாடுகளை மேம்படுத்தும் நோக்கில், நிர்வாகத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
அதனடிப்படையில், கிழக்கு மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளராக எம்.வை.சலீம், கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவால் இன்று (02) நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், மாகாண உள்ளூராட்சி ஆணையாளரின் வெற்றிடத்துக்காக மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் என். மணிவண்ணன், மாகாண உள்ளூராட்சி ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளராக முஸ்லிம் ஒருவர் நியமிக்கப்பட்டமை இதுவே முதல் தடவை எனத் தெரியவருகின்றது.
கிழக்கு மாகாணத்தில் இன ஒற்றுமையையும் சம நல்லிணக்கத்தையும் நல்லாட்சியையும் மேம்படுத்தும் நோக்கில், மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
2 hours ago
2 hours ago
2 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
6 hours ago