எப். முபாரக் / 2018 ஜூலை 10 , பி.ப. 03:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, சேருநுவர பகுதியில் மதுபானம் அருந்திவிட்டு, மனைவியையும் பிள்ளைகளையும் அடித்துக் காயப்படுத்திய நபரை, இம்மாதம் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, மூதூர் நீதவான் எம்.எஸ்.எம்.சம்சுதீன், நேற்று (09) உத்தரவிட்டார்.
சேருநுவர, செல்வநகர் பகுதியைச் சேர்ந்த (வயது 35) சந்தேக நபர் , மதுபானத்துக்கு அடிமையானதோடு, தினமும் வீட்டுக்குச் சென்று, இவ்வாறு குடும்பத்தாரைத் தாக்குவதாக, அயல் வீட்டுக் காரர்களால் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமைய, ஞாயிற்றுக்கிழமை (08) இரவு கைதுசெய்யப்பட்டார் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
3 hours ago
6 hours ago
18 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
18 Mar 2026