தீஷான் அஹமட் / 2018 ஏப்ரல் 16 , பி.ப. 03:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
மூதூர், அக்கரைச்சேனை, கேனிக்காடு கிராம அபிவிருத்தி வீதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற அநாதரவற்றோர் இல்லக் கட்டட வளாகத்திலுள்ள குழியொன்றில் இடறி விழுந்து 2 வயதுப் பெண் குழந்தை பலியாகியுள்ளதென மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.
விளையாடிக் கொண்டிருந்த குழந்தையைக் காணவில்லையெனக் குடும்பத்தினர் தேடிய போது, குழந்தை குறித்த குழிக்குள் உயிருக்குப் போராடிய நிலையில் இருந்துள்ளது.
உடனடியாக அக்குழந்தையை மீட்டு, மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதித்த போது, சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்துள்ளது.
குறித்த வளாகத்தில் கட்டட நிர்மாணப்பணியை மேற்கொண்டு வரும் தரப்பினரால் எவ்வித அபாய சமிக்ஞைகளோ, தடுப்புகளோ அவ்வளாகத்தைச் சுற்றி அமைக்கப்பட்டிருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
11 minute ago
19 minute ago
22 minute ago
24 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
19 minute ago
22 minute ago
24 minute ago