Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 ஜூன் 21 , பி.ப. 12:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம்
திருகோணமலை- மூதூரில் தமிழ் கிராமங்களை உள்ளடக்கிய கொட்டியாபுரப்பற்று என்ற தமிழ் பிரதேச செயலாளர் பிரிவு உருவாக்கப்பட வேண்டும் என்ற மூதூர் தமிழ் மக்களின் கோரிக்கை கிடப்பில் போடப்பட்டுள்ளதாக, தமிழ்மக்கள் கூட்டணியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் எஸ். நந்தகுமார் தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கூறிய அவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில், திருக்கோணமலை மாவட்டத்தில் இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தபோதும், மக்களின் கோரிக்கை உரியமுறையில் அரசிடம் முன்னிலைப்படுத்தாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளமை கவலையளிக்கிறது என்றார்.
மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தமிழ் கிராமங்களின் உட்கட்டமைப்பு வசதியும் மக்களின் வாழ்க்கைத்தரமும் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே காணப்படுவதாக அவர் குற்றஞ்சாட்டினார்.
எனவே எதிர்காலத்தில், தமிழ் கிராமங்களின் நன்மை கருதி, மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ளடங்கும் தமிழ் கிராமங்கள் வேறாக பிரித்தெடுக்கப்பட்டு, கொட்டியாபுரப்பற்று என்னும் தமிழ் பிரதேச செயலாளர் பிரிவு புதிதாக உருவாக்கப்பட்ட வேண்டும் என்று, அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
18 minute ago
5 hours ago
5 hours ago