2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

கொலை குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

Editorial   / 2018 மே 11 , பி.ப. 02:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம்

கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  ஆலங்கேணி பகுதியில்,  உதவிப் பொலிஸ் பரிசோதகர் ஒருவரை சுட்டுக்கொன்ற நபரொருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து, திருகோணமலை மேல் நீதிமன்ற நீதவான் அண்ணலிங்கம் பிரேமசங்கர் உத்தரவிட்டார்.

கடந்த 2001 ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 15 ஆம் திகதி  கிண்ணியா- ஆலங்கேணி  பொலிஸ் நிலையத்துக்கு அருகில், உதவிப் பொலிஸ் பரிசோதகர் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பில் கிண்ணியாவைச் சேர்ந்த இரண்டு பேரும்,  புலியங்குளம் பகுதியைச் சேர்ந்த ஒருவரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்.

இதேவேளை, கடந்த  2003 ஆம் ஆண்டு குறித்த வழக்கு கிழக்கு மாகாண  மேல் நீதிமன்றத்திலும் பின்னர், திருகோணமலை மேல் நீதிமன்றத்திலும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

குறித்த வழக்கு விசாரணைக்காக  இன்றைய தினம் (11)  எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் , வழக்கில் பெயர் குறிக்கப்பட்ட 1 ஆவது  சந்தேகநபர் குற்றவாளி என நிருபிக்கப்பட்டதையடுத்து,  ஆயுள்  தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஏனைய இருவரும் குற்றமற்றவர்கள் எனக் கருதி வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X