Kanagaraj / 2017 ஏப்ரல் 13 , மு.ப. 04:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அப்துல்சலாம் யாசீம்
திருகோணமலை கல்லாறு -தெஹியத்த வீதியினூடாக பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கர வண்டியை நிறுத்தி, அதன் சாரதியை தாக்கி விட்டு முச்சக்கர வண்டிக்கு தீ மூட்டிய சம்பவமொன்று, இன்று (13) அதிகாலை 1.30 மணியளவில் சேறுநுவர பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.
சேறுநுவர பிரதேசத்தில் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் கடமையாற்றும் நபரொருவர் கல்லாறு தெஹிவத்தை வீதியில், முச்சக்கரவண்டியை ஓட்டிசென்றுகொண்டிருந்த போதே, ஒரு வாய்க்காலுக்கு அருகில் மது அருந்திக்ககொண்டிருந்தவர்களே முச்சக்கர வண்டிக்கு தீ மூட்டியதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மரண வீடொன்றில் ஏற்கெனவே இடம் பெற்ற கருத்துமோதலே, இந்த தீ வைப்பு சம்பவத்துக்கு காரணமென சேறுநுவர பொலிஸார் தெரிவித்தனர்.
தீ வைத்ததாக கூறப்படும் நான்கு பேரில் ஒருவரை கைது செய்துள்ளதாகவும் அவர், கல்லாறு பகுதியைச்சேரந்தவர் என்றும், ஏனைய மூவரையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் சேறுநுவர பொலிஸார் தெரிவித்தனர்.
25 minute ago
57 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
57 minute ago
2 hours ago