Princiya Dixci / 2017 மார்ச் 09 , மு.ப. 06:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
திருகோணமலை, குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 14 வயதுடைய சிறுமியொருவரைக் காதலித்து, யாருக்கும் தெரியாமல் அழைத்துச் சென்ற இளைஞரை, இம்மாதம் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை நீதிமன்ற நீதவான் எம்.ஹம்ஸா, புதன்கிழமை (8) உத்தரவிட்டார்.
குச்சவெளி பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர், இரண்டு வருடங்களாக சிறுமியைக் காதலித்து, சிறுமியின் வீட்டார் யாருக்கும் தெரியாமல் அழைத்துச் சென்று கொக்கிளாய் பகுதியிலுள்ள நண்பர் ஒருவரின் வீட்டில் தங்க வைத்திருந்த நிலையில், சிறுமியின் பெற்றோர், குச்சவெளி பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கமைய செவ்வாய்கிழமை (7) இரவு, சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டார்.
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago