Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
வடமலை ராஜ்குமார் / 2018 ஏப்ரல் 02 , பி.ப. 02:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, உப்புவெளிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அன்புவழிபுரம் கிராம சேவகர் பிரிவிலுள்ள காந்திநகர் கிராமத்தில் இடம்பெற்றுவரும் சட்டவிரோதச் சம்பவங்களைக் கட்டுப்படுத்துமாறு கோரி, அநுராதபுரச் சந்தை - கண்டி பிரதான வீதியில் நேற்று (01) இரவு, பொதுமக்கள் வீதிமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போதைப்பொருள் பாவனை, வாள் வெட்டுகள், அசிட்வீச்சு, வழிப்பறி முதலிய சட்டவிரோதச் சம்பவங்கள், அப்பகுதியில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாகப் பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இவ்வாறான சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள், பொலிஸாரால் கைது செய்யப்படினும், அன்று மாலையோ மறுநாளோ மீண்டும் அப்பகுதிகளில் உலாவுவதாகவும், பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
எனவே, பொலிஸார் மீது நம்பிக்கை இழந்து, ஊடகங்கள் மூலம் இப்பிரச்சினையை வெளிப்படுத்தி, உயரதிகாரிகளின் கவனத்துக்குக்கொண்டு செல்ல வேண்டுமென்ற நோக்கில், இந்த வீதிமறியல் போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டனர்.
இந்நிலையில், சம்பவ இடத்துக்கு வருகை தந்த உப்புவெளிப் பொலிஸார், சம்பந்தபட்டவர்களைத் தாம் உடனடியாகக் கைது செய்வதாகவும் வீதியை விட்டுச் கலைந்து செல்லுமாறும் கோரினார்.
இதனையடுத்து, “இன்று (02) மாலை 5 மணிக்குள் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளைக் கைது செய்யவில்லை எனில், மீண்டும் பாரியளவிலான ஒரு போராட்டத்தை மேற்கொள்வோம்” எனத் தெரிவித்த பொதுமக்கள், அங்கிருந்து கலைந்துசென்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago