Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Suganthini Ratnam / 2016 டிசெம்பர் 14 , மு.ப. 08:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பொன் ஆனந்தம்
சம்பூரில் மீள்குடியேற்றப்பட்டுள்ள குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகளை நிர்மாணித்துக் கொடுப்பதில் அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிழக்கு மாகாணக் கல்வி மற்றும் மீள்;குடியேற்ற அமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி தெரிவித்தார்.
சம்பூர்- நாவலடிப் பிரதான வீதித் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை (13) நடைபெற்றது. இவ்விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றியபோது, 'இங்கு மீள்குடியேற்றப்பட்டுள்ள சில குடும்பங்களுக்கே நிரந்தர வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்பட்டுள்ளன. ஏனைய குடும்பங்களுக்கும் நிரந்தர வீடுகளை நிர்மாணித்துக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
மேலும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், சம்பூரில் முதற்கட்டமாக 360 குடும்பங்கள் மீள்குடியேற்றப்பட்டன. இக்குடும்பங்களில் சிலவற்றுக்குத் தற்காலிக வீடுகளை சில அமைப்புகள் அமைத்துக் கொடுத்துள்ளதுடன், மலசலகூட வசதிகளையும் செய்து கொடுத்துள்ளன' என்றார்.
'மேலும், அடுத்த வருடத்துக்கான நிதி ஒதுக்கீட்டில் கிழக்கு மாகாணத்தில் 1,200 வீடுகளை நிர்மாணிப்பதற்கு மீள்குடியேற்ற அமைச்சால் அனுமதி கிடைத்துள்ளது. இந்நிலையில், யுத்தம் காரணமாக தங்களின் சொந்த இடங்களிலிருந்து இடம்பெயர்ந்த மற்றும் இந்தியாவிலிருந்து திரும்பிவந்த மக்களுக்கே இந்த வீடுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உண்மையாகவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த வீடுகள் கிடைக்க வேண்டும் என்று நானும் எதிர்பார்க்கின்றேன்.
மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்கு 300 வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக நான் அறிகின்றேன். ஆனால், இப்;பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சம்பூரில் மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு எத்தனை வீடுகள் கிடைக்கும்; என்று எனக்குத் தெரியவில்லை.
ஆகவே, பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த வீடுகள் கிடைக்க வேண்டும் என்று திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரையும் மேலதிக மேலதிக அரசாங்க அதிபரையும்; நான் கேட்டுக்கொள்கின்றேன்' எனவும் அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
4 hours ago