Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Thipaan / 2017 ஜனவரி 29 , மு.ப. 05:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொன்ஆனந்தம், அப்துல்சலாம் யாசீம்
திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய தேவஸ்தானம், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு 'இறைபணிச் செம்மல்' பட்டம் வழங்கிக் கௌரவித்துள்ளது.
பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், மேற்படி ஆலயத்தின் தம்ப மண்டபத்தை நேற்றுச் சனிக்கிழமை மாலை 5.00 மணிக்கு வைபவ ரீதியாகத் திறந்து வைத்தார்.
ஆலயத்தின் ஆதீன கர்த்தா சோ.இரவிச்சந்திரக்குருக்கள் தலைமையில் நடந்த இந்நிகழ்வில் கருத்துவெளியிட்ட சம்பந்தன்,
'இந்த நாட்டில், சமத்துவமாகவும் சுயமரியாதையுடனும் நிம்மதியாகவும் வாழ வேண்டும் என எமது மக்கள் விரும்புகின்றனர். அதற்கான அருளை, எல்லாம் வல்ல காளியம்பாள் வழங்க வேண்டும்.
இந்த ஆலயத்தின் புனர்நிர்மாணப் பணிகள் இவ்வளவு பெரியளவில் சிறப்பாக இடம்பெற்றுள்ளன என்றால் அதற்கு அம்பாளின் அருள் முக்கியமானதாகும். அதுபோன்று, எமது மக்களின் நீண்டகாலத் துன்பத்துக்கும் அம்பாள் முடிவு தரவேண்டும்' எனவும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
5 hours ago