Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 ஏப்ரல் 19 , பி.ப. 03:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.எல்.நௌபர்
திருகோணமலை மாவட்டத்தின், சிறுபோக நெற்செய்கைக்கான விதைப்பு நடவடிக்கைகள், அதன் பல பிரதேசங்களிலும், விவசாயிகளால் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம், விவசாயிகள் தங்களின், நெல் வயல்களில் விதைப்பு நடவடிக்கான ஆரம்ப, முன் ஆயத்தங்களை மேற்கொள்கிறார்கள். அதாவது வயலை உழுதல், கொத்துதல் வயலுக்கு நீர் கட்டிவைத்தல் முதலான முன் ஆயத்த நடவடிக்கைகளில், அவர்கள் துரிதமாக ஈடுபடுகிறார்கள்.
இந்நிலையில், இவர்களுக்கு உரமானியம் வழங்குவதற்கான துரித நடவடிக்கைகளில், கமநல சேவைகள் திணைக்கள அதிகாரிகள், ஈடுபட்டுவருகின்றனர். பிரதேச செயலக ரீதியாக, பயிர்செய்கை தொடர்பான கூட்டங்களை, அதிகாரிகள் நடாத்தி, விவசாயிகளுக்கு இது தொடர்பில் தெளிவு படுத்தியுள்ளனர்.
தோப்பூர், மூதூர், கந்தளாய் வெருகல், தம்பலகாமம் உள்ளிட்ட திருகோணமலை மாவட்டத்தின் பல பகுதிகளிலும், நீரை நம்பி செய்கை பண்ணப்படவுள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் சிறுபோக நெற்செய்கை காணிகளில், விவசாயிகள் துரிதமாக ஈடுபட்டுள்ளதுடன், மே மாதத்தின் நடுப்பகுதிக்குள், வயல் விதைப்பு நடவடிக்கைகளை பூரணப்படுத்தி முடிக்கவும் எதிர்பார்க்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
20 minute ago
49 minute ago
1 hours ago