2025 மே 07, புதன்கிழமை

சிறுவர் பூங்கா திறந்து வைப்பு

Editorial   / 2018 ஏப்ரல் 24 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீஷான் அஹமட், ஏ.எம்.ஏ.பரீத்

மூதூர் பிரதேச சபையின் நிதி ஒதுக்கீட்டிலிருந்து 17 இலட்சம் ரூபாய் செலவில் மல்லிகைத்தீவு கிராமத்தில் அமைக்கப்பட்ட, மல்லிகைத்தீவு சிறுவர் பூங்காவின் திறப்பு விழா நேற்றைய தினம் (23) மாலை மூதூர் பிரதேச சபையின் செயலாளர் ஏ.டபிள்யு.ஹில்மி தலைமையில் இடம் பெற்றது. இங்குள்ள சிறார்கள் தங்களது பொழுதினை கழிப்பதற்கு சிறுவர் பூங்கா அமைக்கப்பட வேண்டுமென திருகோணமலை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் மூதூர் பிரதேச சபையின் செயலாளரிடம் ஆலோசணை வழங்கியதையடுத்து, இச்சிறுவர் பூங்கா மூதூர் பிரதேச சபையினால் அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட பிராந்திய உள்ளூராட்சி ஆணையாளர் எஸ்.சுதாகரன், மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.எம்.ஏ.அறூஸ், மூதூர் பிரதேச சபையின் உறுப்பினர்கள் கிராம அபிவிருத்தி சங்க நிருவாகிகள், ஆலய பரிபாலன சபையின் உறுப்பினர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X