2025 மே 06, செவ்வாய்க்கிழமை

சீதனவெளிக் கிராமத்தின் ‘குடிநீர்ப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு’

வடமலை ராஜ்குமார்   / 2018 மே 08 , பி.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

மூதூர் கிழக்கு - சீதனவெளிக் கிராமத்தின் குடிநீர்ப் பிரச்சினை விரைவில் தீர்த்து வைக்கப்படும் எனவும், அதுவரை மக்கள் பொறுமையாக இருக்க வேண்டுமெனவும், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ணசிங்கம் தெரிவித்தார்.
சீதனவெளிக் கிராமத்தில் மக்கள் மத்தியில் மக்களின் கோரிக்கைகளுக்கு நேற்று  (07) பதிலளிக்கையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வுக்கு, மூதூர் பிரதேச சபையின் உறுப்பினர் திருமதி ஜெயமாலா தலைமை தாங்கினார்.
தொழில் வளம் இல்லை, வழமையாகச் செய்யும் தொழிலை அரசாங்கம் சட்டபூர்வமாக நிறுத்திவிட்டது உள்ளிட்ட பல பிரச்சினைகள், இந்நிகழ்வின் போது மக்களால் குறிப்பிடப்பட்டதுடன், 300 மீற்றர் வித்தியாசத்தில் நீர் விநியோகம் நடைபெறுபெறுவதாகவும், அதனை விஸ்தரித்துத் தருமாறும் மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து, மக்களின் இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக, நாடாளுமன்ற உறுப்பினர் உறுதியளித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X