Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 மே 19 , பி.ப. 01:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.ஆர்.எம்.றிபாஸ்
கிண்ணியா சூரங்கல், சாந்தி நகர், சுனாமி வீட்டுத் திட்ட வீதிகளை புனரமைப்பதற்கு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும் என்று, பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருகோணமலை - கிண்ணியா, சூரங்கல் கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள சாந்தி நகர் சுனாமி விட்டுத் திட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள வீதிகள், குண்டும் குழியுமாகக் காணப்படுவதால், அவ்வீதி வழியாகப் போக்குவரத்து செய்வதில் பாரிய சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக, பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
இவ் வீதிகளே பிரதான வீதிகளாகக் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.
மழைக் காலங்களில் வீதிகளிலுள்ள குழிகளில், நீர் தேங்கி நிற்பதால் போக்குவரத்து செய்வதில் பாரிய இடர்களை எதிர்கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், வீதிகளைப் புனரமைக்க முன்வர வேண்டும் என்றும் பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
16 minute ago
24 minute ago
33 minute ago