அப்துல்சலாம் யாசீம் / 2018 செப்டெம்பர் 29 , பி.ப. 02:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, கந்தளாய் தலைமையக பொலிஸ் நிலையங்களில் நேற்றிரவு முதல் இன்று(29) அதிகாலைவரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, சந்தேகநபர்கள் 30 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலையம் முன்னெடுத்த சுற்றிவளைப்பில், பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 10 சந்தேக நபர்களையும், போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின்பேரில் ஒருவரையும், மதுபோதையில் வாகனம் செலுத்திய நான்குபேரை கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் ஐவரையும் குழப்பங்களை ஏற்படுத்திய ஒருவரையும் கைது செய்துள்ளதாகவும் திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, கந்தளாய் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இரண்டு குற்றச்செயல்களுடன் தொடர்புபட்ட ஒருவரையும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 4 பேரையும், சந்தேகத்தின்பேரில் மூவரையும். கைதுசெய்துள்ளதுடன், ஹெரோய்ன் போதைபொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின்பேரில் மற்றுமொரு சந்தேக நபரை கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்களை கந்தளாய், திருகோணமலை நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
6 minute ago
53 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
53 minute ago
1 hours ago