2025 மே 06, செவ்வாய்க்கிழமை

சொந்த ஊரில் கௌரவம்...

Editorial   / 2018 மே 09 , பி.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளில், ஈட்டி எறிதல் போட்டியில் 39.12 மீற்றர் தூரம் எறிந்து, தி/மூ/பட்டித்திடல் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை உயர்தரப் பிரிவு மாணவி நாகேந்திரம் உதயவாணி, 3ஆம் இடத்தைப் பெற்று, வெண்கலப் பதக்கம் வென்றார்.

இம்மாணவியை, பாடசாலை சமூகத்தால் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு, பாடசாலையில் நேற்று (08) இடம்பெற்றது. இந்நிகழ்வில் மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.எம்.ஏ.அறூஸ், அதியாகக் கலந்துகொண்டார்.

மூதூர், தங்கநகர் எனும் பின்தங்கிய கிராமத்தைச் சேர்ந்த இம்மாணவி மாத்திரமே, திருகோணமலை மாவட்டத்தில் இவ்வருடம் தெற்காசியப் போட்டியில் பதக்கமொன்றை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

(படங்களும் தகவலும்: தீஷான் அஹமட், ஏ.எம்.ஏ.பரீத், அப்துல்சலாம் யாசீம்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X