2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

தோப்பூரில் மிதிவெடி மீட்பு

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 13 , மு.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

திஷான் அஹமட், ஏ.எம்.ஏ.பரீத்

திருகோணமலை மாவட்டத்தில் தோப்பூர் சந்தைக் கட்டிடத் தொகுதி வளாகத்தில் மிதிவெடியொன்று, ஞாயிற்றுக்கிழமை மாலை மீட்கப்பட்டதாக, தோப்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பகுதியில் வடிகான் தோண்டிக் கொண்டிருந்த போது சந்தேகத்துக்கிடமான பொருள் தென்பட்டுள்ளது.

இது தொடர்பாக தோப்பூர் பொலிஸாருக்கு உடனடியாகத் தகவல் வழங்கப்பட்டதையடுத்து, இந்த மிதிவெடி மீட்கப்பட்டது.

குறித்த மிதிவெடி மீட்கப்பட்ட இடத்தில் முன்னர் தோப்பூர் பொலிஸ் காவலண் ஒன்று இருந்துள்ளதாகத் தெரியவருகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X