Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Princiya Dixci / 2016 டிசெம்பர் 29 , மு.ப. 05:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடமலை ராஜ்குமார்
திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் புனரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்கு தொல்பொருள் திணைக்களம் தொடர்ந்து முட்டுக்கட்டடையாகவுள்ளது. ஆலயத்துக்கு அன்றாடம் மூவினங்களையும் சேர்ந்த பல்லாயிரக் கணக்கான பக்தர்களும் சுற்றுலாப் பிரயாணிகளும் வந்த வண்ணம் உள்ளனர். அவர்களை ஆதரித்து, போதுமான சேவைகளை வழங்க கட்டுமாணங்களை மேற்கொள்ள வேண்டுமல்லவா? என, திருக்கோணேஸ்வரர் ஆலயப் பரிபாலன சபையின் தலைவர் க.அருள்சுப்பிரமணியம் தெரிவித்தார்.
சில தினங்களுக்கு முன்னர் மரங்களை வெட்டிய குற்றத்துக்காக, அவரைக் கைதுசெய்ய பொலிஸார் முயற்சித்த விடயம் தொடர்பாக வினவியபோதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
'திருக்கோணேஸ்வரர் அலயத்தில் புனரமைக்கப்பட வேண்டிய பல விடயங்கள் உள்ளது. அவற்றுக்காக தனித்தனியாக அனுமதி பெற தொல்பொருள் திணைக்களத்துக்கு நாம் கோரிய போதும் அவர்கள் புனரமைப்புக்கான முழுமையானதொரு திட்டத்தைத் தருமாறு கோரினர்.
அதனைக் கொழும்பிலுள்ள தனியார் கம்பனியொன்றுடன் ஒப்பந்தம் செய்து ஒரு மாத காலம் பணியாற்றி, 2 இலட்சத்து 50 ஆயிரம் செலவில் அந்தத் திட்டத்தை, தொல்பொருள் திணைக்களத்துக்கு வழங்கி, 03 வருடங்களாகியும் அதற்கு எந்த நடவடிக்கையும் அவர்கள் எடுக்கவில்லை.
'எனினும், 2016 ஆவணி மாதத்தில் எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் உட்பட பல அதிகாரிகளும் தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளர் நாயகத்துடன் நடத்திய கலந்தரையாடலக்கு அமைய நாம் கோரிய பிரதான பணிகளான அன்னதான மடத்தை விஸ்தரித்து கட்டுமானம் மேற்கொள்ளல், தேர் முட்டியைப் புனரமைத்தல், வீதியின் இரு மருங்கிலுமுள்ள கடைகளை அகற்றி வேறு இடத்தில் அமைத்தல் போன்றவற்றுக்கு அனுமதி வழங்கமாறு கோரியிருந்தாம்.
'அதற்கான அனுமதியை நேரடியாக வந்து பார்வையிட்டு, தேர் முட்டியை மற்றும் அன்னதான மடம் என்பனவற்றைப் புனரமைக்க அனுமதி வழங்கினர். பார்வையிட வந்த தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளிடம் இந்த அன்னதான மடம் கட்டட பணிகளை மேற்கொள்ளும் போது இங்குள்ள மரங்கள் இடையூராகவுள்ளது என கேட்டதற்கு, அவற்றை அகற்றவும் அனுமதியளித்தனர்.
'எனினும், பணிகள் ஆரம்பமாகி நடைபெற்றுக் கொண்டு செல்லும் போது இங்கிருந்த இரண்டு வேப்பமரங்கள், கட்டத்தை விஸ்தரிப்பதுக்கு இடையூராகவுள்ளது என்பதற்காக வேலையில் ஈடுபட்ட பணியாளர்கள் அவற்றை அகற்றியுள்ளனர். இதற்கு தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளால் ஆலய பரிபாலன சபை தலைவரைக் கைதுசெய்வதற்கான நடவடிக்கையைப் பொலிசார் ஊடாக மேற்கொண்ட போதும் இதை நடைமுறைப்படுத்தவில்லை' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
16 May 2025