2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

தங்கத்துரையின் 21ஆவது ஆண்டு நினைவுநாள் நிகழ்வு

வடமலை ராஜ்குமார்   / 2018 ஜூலை 11 , பி.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் அ.தங்கத்துரையின் 21ஆவது ஆண்டு நினைவு நாள் நிகழ்வு, மூதூர் - கிளிவெட்டி மகா வித்தியாலயத்தின் தங்கத்துரை மண்டபத்தில், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (15) காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது.

இவர், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு, 1970 முதல் 1977 வரை மூதூர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவுசெய்யப்பட்டார்.

பின்னர் 1994ஆம் ஆண்டில், தழிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். 1997, ஜூலை 5 ஆம் திகதி, திருகோணமலையில் வைத்து இனந்தெரியாதோரால் இவர் படுகொலை செய்யப்பட்டார்.

திருகோணமலை மாவட்ட அரசியல் வரலாற்றில் மக்கள் மனதில் இடம்பிடித்த அரசியல் தலைவர்களுள் ஒருவராக உள்ள இவருடைய நினைவு நாளை, அவருடைய சொந்த ஊரான கிளிவெட்டியில் கடந்த பல ஆண்டுகளாக பொதுமக்கள் நினைவேந்தி வருகின்றனர்.

அதனடிப்படையில் 15ஆம் திகதி இடம் பெறவுள்ள நிகழ்வில் ஆரம்ப நிகழ்வாக நினைவுத்தீபம் ஏற்றல், இறைவணக்கம், ஆத்மசாந்திப் பிரார்த்தனை, நினைவுரை, நினைவுப் பகிர்வுகள் என்பன இடம்பெறும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X