கனகராசா சரவணன் / 2018 ஏப்ரல் 25 , பி.ப. 05:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லுரியில் முஸ்லிம் ஆசிரியர்கள் திடீரென ஹபாயா அணிந்து வந்ததன் பின்னர் அங்கு தோன்றியுள்ள குழப்பகரமான நிலைமைகள் கவலையளிப்பதாக உள்ளதுடன், இது திட்டமிட்ட மதவாத செயற்பாடுகளின் ஆரம்பமாக கருதவதோடு, இவ்வாறான மதவாத செயற்பாடுகளை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம் என இந்து சம்மேளனத்தின் தலைவர் நாரா. அருண்காந்த தெரிவித்தார்.
குறித்த, கல்லூரியில் முஸ்லிம் அடிப்படைவாதிகள் அதிபரை அச்சுறுத்தியமை தொடர்பிலும், முஸ்லிம் ஆசிரியர்கள் மதவாதக்குழுக்களால் வழிநடத்தப்படுவது குறித்தும், இந்து சம்மேளனத்தின் தலைவர் இன்று(25) ஊடக அறிக்கை விடுத்துள்ளார்.
இலங்கையில் காணப்படும் பாடசாலைகளில், பாரம்பரியமாக பின்பற்றப்படும் பண்பாடு,கலாச்சாரம், இனவிகிதாசாரம் என்பவற்றிற்கு ஏற்பவே அங்கு கடமை புரியும் ஆசிரியர்களும் தம்மை அதற்கேற்றவாறு உருமாற்றிக்கொண்டு மாணவர்களை ஒழுக்கமிக்கவர்களாக வழிநடத்திவருகின்றனர்.
எனினும், சவூதி அரேபியாவில் முஸ்லிம் பெண்கள் ஆடையணிவது போன்று, இலங்கையிலும் குறிப்பாக திருகோணமலை ஸ்ரீ சண்முகா மகளிர் கல்லூரியிலும் அணியவேண்டும் என்பது கடும் கண்டனத்திற்குறியது.
இதன் பின்னனியில், ஒரு அரசியல் வாதி உள்ளார் என்பதுவும் முஸ்லிம் அடிப்படைவாத அமைப்பொன்று செயற்படுவதாகவும் பெற்றோர் குற்றம் சுமத்துகின்றனர். இது தொடர்பாக பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் விசாரிக்கவேண்டும்.
தமிழ், முஸ்லிம் மக்களுக்கிடையே மிகப்பெரிய விரிசலை உருவாக்கக்கூடிய ஒரு நிகழ்வாக இது பரிணமிக்க வாய்ப்புள்ளது. இவை அனைத்திற்கும் அப்பால் மத அடிப்படைவாதிகள் சிலர் பாடசாலையினுள் அத்துமீறி பிரவேசித்து அதிபரை அச்சுருதியுமை இந்நாட்டில் முஸ்லிம் அடிப்படைவாதம் சத்தம் இல்லாமல் பரவி வருவதை கோடிட்டுக்காட்டுகின்றது.
எனவே, இது தொடர்பாக பொலிஸ்மா அதிபர் உடனடியாக தலையிட்டு பாடசாலை அதிபரின் பாதுகாப்பை உறுதிசெய்வதோடு, பாடசாலையினுள் புகுந்து அதிபரை அச்சுறுத்தியவர்களை உடனடியாக கைதுசெய்யவேண்டுமென இந்து சம்மேளனத்தின் தலைவர் நாரா.அருண்காந்த் அவர்கள் பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் மூலம் அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளதா இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 minute ago
50 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
50 minute ago
2 hours ago
2 hours ago