2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

திருகோணமலை மீனவர் பிரச்சினை தொடர்பாக ஆராய்வு

Editorial   / 2018 ஜூன் 09 , பி.ப. 12:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத்,  எப்.முபாரக்,  ஏ.ஆர்.எம்.றிபாஸ், ஹஸ்பர் ஏ ஹலீம்

திருகோணமலை மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வொன்றை பெற்றுக்கொடுக்கும் நோக்கில், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப், இலங்கை கடற்படைத் தளபதி எஸ்.எஸ். ரணசிங்கவை நேற்று  (08) சந்தித்துக் கலந்துரையாடினார்.

மீன்பிடி மற்றும் நீரியல்வள அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சாவை அண்மையில் சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர், மீனவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த மீன்பிடித் தடையை மூன்று மாத காலம் தற்காலிகமாக அகற்றுவதற்கான அனுமதியைப் பெற்றிருந்தார்.

மேலும், இந்தக் காலப்பகுதியில் கடற்படை, மீன்பிடித் திணைக்கள அதிகாரிகள் மற்றும் துறைசார்ந்தோருடன் பேசி இத்தடையால் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண முடிவு எட்டப்பட்டது.

இதனடிப்படையில், மீன்பிடித் தடை நீக்கப்படுவதாக கடற்தொழில் அமைச்சால் வழங்கப்பட்ட கடித்ததை கடற்படை தளபதியிடம் ஒப்படைத்த நாடாளுமன்ற உறுப்பினர், நிரந்தரத் தீர்வு காண்பதற்கான பேச்சுவார்த்தை சம்மந்தமாக கடற்படைத் தளபதியுடன் விரிவாகக் கலந்துரையாடினார்.

இதன்பின் கருத்து தெரிவித்த கடற்படை தளபதி இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண தனது முழு ஒத்துழைப்பையும் வழங்க தயாராகவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரிடம் வாக்குறுதியளித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .