அப்துல்சலாம் யாசீம் / 2018 மார்ச் 28 , பி.ப. 04:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை - கந்தளாய் பிரதான வீதி ஐந்தாம் கட்டை பகுதியில், இன்று (28) அதிகாலை வான் ஒன்றும் - மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் அதே பிரதேசத்தைச் சேர்ந்த சமீர (30 வயது) எனத் தெரியவந்துள்ளது. சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்துடன் தொடர்புடைய வானின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, திருகோணமலை சீமெந்து தொழிச்சாலை தாங்கிக்குள் தவறி விழுந்து இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதாக சீனக்குடா பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று நள்ளிரவு இடம்பெற்ற இந்த அனர்த்தத்தில் திருகோணமலை - பாலையூற்று பகுதியைச் சேர்ந்த ரொபட் ஜேசுதாஷன் (27 வயது) என்ற இளைஞரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த இளைஞன் சீமெந்து ஏற்றிக்கொண்டிருந்த வேளை தவறி உள்ளே விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.
சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து சீனக்குடா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
5 minute ago
23 minute ago
41 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
23 minute ago
41 minute ago
1 hours ago