Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 ஏப்ரல் 26 , பி.ப. 05:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அப்துல்சலாம் யாசீம், எப்.முபாரக்
சுமூகமான தீர்வு மத்திய கல்வி அமைச்சால் வழங்கப்படும் வரை, சம்பந்தப்பட்ட ஆசிரியைகளுக்கு தற்காலிக இடமாற்றம் வழங்கப்படும் என, கிழக்கு மாகாண மேலதிக கல்வி பணிப்பாளர் ஏ.விஜயானந்தமூர்த்தி தெரிவித்தார்.
திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற ஹபாயா விவகாரம் தொடர்பாக இன்று (26) வலயக்கல்வி அலுவலகத்தில் விசேட கலந்துரையாடலொன்று நடைபெற்றது.
இக்கலந்துரையாடலின் போது, மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் நிமால் பெரேரா, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கபில கடுபிடிய, திருகோணமலை தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி துமிந்த ராஜபக்ஷ, அகில இலங்கை ஜம்யிய்யதுல் உலமா சபையின் திருகோணமலை நகரக் கிளைத் தலைவர் ஏ.ஆர்.பரீட் மௌலவி, திருகோணமலை பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவர் எம்.எஸ்.வலீத் ஹாஜியார், என்.சீ.ரோட் பள்ளி தலைவர் எம்.வை.இல்யாஸ், நகர சபை உறுப்பினரான மௌசூன் மாஸ்டர், பிரதேச சபை உறுப்பினர் துவான் வஹார்தீன், திடீர் மரண விசாரணை அதிகாரி ரூமி மற்றும் ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி அதிபர், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர் என பலரும் கலந்துகொண்டனர்.
இக்கலந்துரையாடலின் போது, ஒவ்வொரு மதத்துடைய கலாசார விழுமியங்களை மதித்து புரிந்துணர்வுடன் ஒற்றுமையாக வாழ வேண்டுமெனவும், சமூகங்களுக்கிடையிலான ஒற்றுமை தொடர்பாக நாம் கரிசணையுடன் வாழ வேண்டுமெனவும் கூறப்பட்டது.
அத்துடன் , முஸ்லிம் மக்களுக்கு எதிரானவர்கள் அல்ல என வௌிக்காட்டியதுடன், பாடசாலையின் சமய கலாசாரம் பேணப்பட வேண்டுமென தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் பாடசாலை சார்பாக கலந்துகொண்டவர்கள் குறிப்பிட்டனர்.
இதேவேளை, ஆசிரியர்கள் பாடசாலைக்கு பொறுத்தமான பாடசாலையால் தீர்மானிக்கப்பட்ட உடைகளை அணிய வேண்டும் என்பதை தாம் வலியுறுத்துவதாகவும் அக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
26 minute ago
55 minute ago
1 hours ago