2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

தொலைபேசி காதலால் நடந்த விபரீதம்

அப்துல்சலாம் யாசீம்   / 2018 ஜூன் 03 , பி.ப. 02:40 - 1     - {{hitsCtrl.values.hits}}

தொலைபேசியில் ஒரு வார காலமாக காதலித்து வந்த  நபர்  தனது  பதினாறு இலச்சம் ரூபாய் பணத்தை  திருடிச்சென்ற சம்பவமொன்று திருகோணமலை உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் பதிவாகியுள்ளது.

கொழும்பு , பேலியகொட ,கெமுனு மாவத்தையைச்சேர்ந்த  (வயது 38) பெண்ணுக்கே இச்சம்பவம் நேர்ந்துள்ளது.

ஒரு வார காலமாக தொலைபேசியில், இரவு பகலாக பேசி வந்த நபர் மீது கொண்ட நம்பிக்கையினால், பேலியகொடயிலிருந்து காரொன்றில்  திருகோணமலையை சுற்றிப்பார்ப்பதற்காக இருவரும்  ​சென்றதாகவும்,

அலஸ்தோட்டம் பகுதியில் பிரபல ஹோட்டலொன்றில் அன்றிரவு  இருவரும் தங்கியதுடன், மது அருந்திவிட்டு உறங்கிய நிலையில் மறுநாள் காலையில் எழும்பிய போது, தன்னுடன் வந்தவரை காணவில்லையெனவும் தன்னிடம் இருந்த பதினாறு இலச்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துவிட்டுச் சென்றுள்ளதாகவும்  பாதிக்கப்பட்ட பெண் உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

குறித்த பெண்ணிடம்,  அழைத்து வந்தவரின் கையடக்க தொலைபேசி மாத்திரமே இருந்ததாகவும்  அவர், பற்றிய விபரங்கள்  எதுவும் இல்லையெனவும் பொலிஸ் வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில், உப்புவெளி பொலிஸார் ஹோட்டலில் பொறுத்தப்பட்டிருந்த  சீசீடி கெமரா பதிவினை பயன்படுத்தி விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 


  Comments - 1

  • Anwar sihan Sunday, 03 June 2018 04:35 PM

    Facebook kadal ippatithan makkal

    Reply : 0       1


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X