2025 ஜூலை 23, புதன்கிழமை

நீரில் மூழ்கி மீனவர் உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2016 டிசெம்பர் 26 , மு.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை, அடம்பொட வெட்டைப் பகுதியிலுள்ள களப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, மீனவர் ஒருவர் நீரில் மூழ்கி இன்று (26) உயிரிழந்துள்ளதாகப்  பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான நல்லையா மகேஸ்வரன்  (32 வயது) என்பவரே உயிரிழந்துள்ளார்.

வீச்சு வலையைப் பயன்படுத்தி மீன் பிடித்துக் கொண்டிருந்த இவர், நீரில் விழுந்தபோதே இந்த அசம்பாவிதம் இடம்பெற்றது.  
அவருக்கு வலிப்பு  ஏற்பட்டிருக்கலாம். அதனால் அவர் நீரில் விழுந்திருக்கலாம் என அவரது மனைவி பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .