Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 23, வெள்ளிக்கிழமை
Suganthini Ratnam / 2016 ஏப்ரல் 10 , மு.ப. 06:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எம்.ஏ.பரீத், தீசான் அஹமட், பதுர்தீன் சியானா
கடந்தகால யுத்த சூழ்நிலை காரணமாக திருகோணமலை, மூதூர் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதியில் காணாமல் போனோர் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் அவர்களின்; குடும்பங்களுக்கு உரிய பதில் வழங்க வேண்டுமென்பதுடன், உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டுமெனக் கோரி நாளை திங்கட்கிழமை காலை ஒன்பது மணிக்கு மூதூர் பிரதேச செயலகத்துக்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
மூதூர் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படவுள்ள இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தின்போது, மூதூர் பிரதேச செயலாளர் வீ.யூசுப்பிடம் மூதூரில் காணாமல் போனோர் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களினால் மகஜர் கையளிக்கப்படவுள்ளதாக அக்குழுவின் தலைவர் சிவஸ்ரீ இ.பாஸ்கரன் குருக்கள் தெரிவித்தார்.
இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தில் மனிதநேய அமைப்புகளையும் நலன் விரும்பிகளையும் கலந்துகொள்ளுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்தார்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
22 May 2025