Niroshini / 2017 ஜனவரி 07 , மு.ப. 07:03 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்
மஹிந்தவின் ஆட்சியில் விட்ட தவறுக்கு நல்லாட்சியை தூசிப்பதால் எந்த பயனுமில்லை என ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப் தெரிவித்தார்.
இன்று சனிக்கிழமை கொழும்பில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
தற்போது என்னிடம் பலரும் வில்பத்து பற்றி கேட்ட்கின்றனர். நான் ஒன்றை மட்டும் தெளிவாக கூறிக்கொள்ள விரும்புகிறேன். காடுகளை யார் அழித்தாலும் அது குற்றமே. இயற்கை வளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. ஆனால் அங்குள்ள பூர்வீக குடிகளை துரத்தியடித்துவிட்டு சிங்கம் புலிகளை குடியமர்த்த முடியாது.
குறிப்பிட்ட வர்த்தமானி கடந்த அரசாங்கத்தின் காலத்திலேயே வெளியிடப்பட்டது. இது வெளியிடப்பட்ட போது அப்போதிருந்த எமது முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெரும்பாலானோர் அரசாங்கத்தின் பக்கமே இருந்தனர். யாரும் இதை தடுக்கவோ இதற்கெதிராக குரல் எழுப்பவோ இல்லை.
இன்று நல்லாட்சியிடம் முஸ்லிம்களுக்கு ஆயுதம் கேட்டவர்களும் முஸ்லிம்களின் தேசிய தலைவர்களும் அன்றே இதை பேசியிருக்க வேண்டும். அன்று மஹிந்தவின் ஆட்சியில் விட்ட தவறுக்கு நல்லாட்சியை தூசிப்பதால் எந்த பயனுமில்லை. அந்த தவறை சரி செய்யும் வாய்ப்பு நல்லாட்சியில் நிறையவே உள்ளது.
நல்லாட்சியில் எமக்கு எதையும் நேரடியாக ஜனாதிபதி பிரதமரிடம் பேச கூடிய சுதந்திரம் தரப்பட்டுள்ளது. ஆகவே, யார் எமது சமூகத்தின் தேசிய தலைவர் எனும் போட்டியை ஓரம் கட்டிவிட்டு அனைத்து முஸ்லிம் பிரதிதிகளும் இணைந்து பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை பெற்றுகொடுப்போம் என்றார்.
5 minute ago
12 minute ago
21 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
12 minute ago
21 minute ago
3 hours ago