2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

நவீனமயப்படுத்தப்பட்ட வகுப்பறைகள்

அப்துல்சலாம் யாசீம்   / 2018 மே 24 , பி.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவின் நிதியொதுக்கீட்டின் கீழ், திருகோணமலை மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட இரண்டு பாடசாலைகளில், நவீனமயப்படுத்தப்பட்ட வகுப்பறைகளை நிர்மாணிக்கவுள்ளதாக, கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளை நவீனமயப்படுத்தி, கற்றல், கற்பித்தல் விடயங்களை மேம்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு, சீன அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்ததையடுத்து, சீனாவைச் சேர்ந்த பல்கலைக்கழக ஒன்றிய அங்கத்தவர்கள், திருகோணமலைக்கு, மூன்று நாள் விஜயமொன்றை நேற்று  (23) மேற்கொண்டனர்.

அவ்விஜயத்தின் போது, திருகோணமலை மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட சென். மேரிஸ் கல்லூரி, கந்தளாய் அக்ரபோதிய சிங்கள மகா வித்தியாலயம் ஆகியவற்றுக்கும் விஜயமொன்றை மேற்கொண்டனர்.

அவ்விஜயத்தையடுத்து, மிக விரைவில் இப்பாடசாலைகளில் நவீனமயப்படுத்தப்பட்ட வகுப்பறைத் திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X