2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

நீதிபதி மா.இளஞ்செழியன் கடமைகளைப் பொறுப்பேற்றார்

அப்துல்சலாம் யாசீம்   / 2018 மே 30 , பி.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதியாகக் கடமையாற்றிய மாணிக்கவாசகர் இளஞ்செழியன், பலத்த பாதுகாப்புக்கு மத்தியில், திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதியாக, இன்று (30) உத்தியோகபூர்வமாகக் கடமையைப் பொறுப்பேற்றார்.

இதற்போது, "கிழக்கில் மீண்டும் சூரியன் உதித்துவிட்டது" என்ற கோஷத்துடன், திருகோணமலை நீதிமன்றக் கட்டடத் தொகுதியில் வரவேற்பு நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆயுதம் தாங்கிய பொலிஸார் விசேட அதிரடிப்படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டதுடன், திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா, பதிவாளர்கள், சட்டத்தரணிகள் ஊழியர்கள் எனப் பலரும் சேர்ந்து மாலை அணிவித்து வரவேற்றனர்.

அத்துடன், தமது கடமையைப் பொறுப்பேற்றதுடன், இரண்டு மணித்தியாலங்கள் சிநேகபூர்வமாக தமது நீதிமன்றக் கட்டமைப்பு தொடர்பாகவும், நீதிமன்றங்களின் மேல் மக்கள் வைக்கும் நம்பிக்கை காப்பாற்ற வேண்டியதன் அவசியம் பற்றியும் கருத்துகளைக் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X