Thipaan / 2016 ஜூன் 19 , மு.ப. 05:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
திருகோணமலை, சூரியபுர பிரதேசத்தில் பதினைந்தாயிரம் ரூபாய் பணத்தைத் திருடிய சந்தேகநபரை, இம்மாதம் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதவான்
எச்.கியூ. தம்மிக்க, நேற்று சனிக்கிழமை(18) உத்தரவிட்டார்.
சேருநுவர பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய குறித்த சந்தேகநபர், சூரியபுர பிரதேசத்திலுள்ள நண்பரொருவரின் வீட்டில் தங்கியிருந்து கூலி வேலைகள் செய்து வந்த நிலையில், வீட்டில் வைத்திருந்த பதினைந்தாயிரம் ரூபாய் பணத்தினைத் திருடி தலைமறைவாகியுள்ளார்.
இந்நிலையில், விட்டிலிருந்த பணம் திருடப்பட்டுள்ளதாக உரிமையாளரால், பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து, சந்தேகநபர், நேற்று சனிக்கிழமை (18) கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை, கந்தளாய் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் நேற்றைய தினமே ஆஜர்படுத்திய போதே, நீதவான் மேற்கண்ட உத்தரவைப் பிறப்பித்தார்.
4 minute ago
14 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
14 minute ago
4 hours ago