Niroshini / 2016 ஏப்ரல் 18 , மு.ப. 08:36 - 0 - {{hitsCtrl.values.hits}}

-தீசான் அஹமட்
08 வருடமாக பராமரிப்பு பணத்தை செலுத்தாது தலை மறைவாகி வாழ்ந்து வந்த நபருக்கு இன்று திங்கட்கிழமை, மூதூர் நீதிமன்ற நீதிபதி ஜ.என்.றிஸ்வான் ஒவ்வொரு மாதமும் இரண்டு பிள்ளைகளுக்கு 6,000 ரூபாய் பராமரிப்பு பணம் செலுத்த வேண்டுமென உத்தரவு பிறப்பித்தார்.
திருகோணமலை-சேருநுவர பொலிஸ் பிரிவுக்குற்பட்ட தங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த நபருக்கே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
குறித்த நபர் தனது மனைவி பிள்ளைகளை பிரிந்து வாழ்ந்து வருகின்ற நிலையில், 08 வயது மற்றும் 11 வயது பிள்ளைகளுக்கு கடந்த 08 வருடமாக பராமரிப்பு பணத்தை செலுத்தாது தலை மறைவாகி வாழ்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில் குறித்த நபரை பொலிஸார் கைது செய்து மூதூர் நீதிமன்ற நீதிபதி ஜ.என்.றிஸ்வான் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.
இதன்போது, குறித்த நபர் ஒவ்வொரு மாதமும் இரண்டு பிள்ளைகளுக்கு 6000 ரூபா பராமரிப்பு பணம் செலுத்த வேண்டுமென நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
பாதிக்கப்பட்ட இரண்டு பிள்ளைகளின் சார்பாக மூதூர் சட்ட உதவி ஆணைக் குழுவின் சட்டத்தரணிகள் பராமரிப்பு வழக்கை தாக்கல் செய்து நீதிமன்றில் ஆஜராகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
9 minute ago
22 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
22 minute ago
2 hours ago