Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
தீஷான் அஹமட் / 2018 ஜூன் 03 , பி.ப. 03:57 - 1 - {{hitsCtrl.values.hits}}
மூதூர், இருதயபுரம் (பச்சனூர்) பாலவிநாயகர் அறநெறிப் பாடசாலை, மீண்டும் இன்று (03) காலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
2006ஆம் ஆண்டு இடம்பெற்ற யுத்த இடப்பெயர்வுகளால், மக்களுக்கு ஏற்பட்ட பல பாதிப்புகளுக்குப் பின்னர், இருதயபுரம் கிராமத்திலுள்ள ஸ்ரீ பாலவிநாயகர் அறநெறி பாடசாலை, கடந்த 12 வருடங்களாக இயங்காமல் இருந்து வந்தது.
இது தொடர்பில், பிரதேச மக்கள், மூதூர் பிரதேச இந்துக் குருமார் சங்கத்தின் கவனத்துக்குக் கொண்டு வந்ததையடுத்தே, இந்த அறநெறிப் பாடசாலை, மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில், மூதூர் பிரதேச இந்துக் குருமார் சங்கத்தின் தலைவர் சிவஸ்ரீ இ.பாஸ்கரன் குருக்கள், செயலாளர் சு.வேலுப்பிள்ளை, ஓய்வுநிலை அதிபரும் கொட்டியாரப்பற்று ஆலய பரிபாலண சபை உறுப்பினருமான கா.வல்லிபுரம் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
Thanesh Sunday, 16 September 2018 03:21 PM
Congrats
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
44 minute ago
52 minute ago
1 hours ago