2025 மே 06, செவ்வாய்க்கிழமை

புதிய தலைவர் நியமனம்

Editorial   / 2018 ஏப்ரல் 24 , பி.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஹஸ்பர் ஏ ஹலீம், ஏ.எம்.ஏ.பரீத்

கிழக்கு மாகாணத்தின் சுற்றுலா சபை பணியகத்தின் புதிய தலைவராக கோசல விக்ரமநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கான நியமனக் கடிதத்தை, கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹிதபோகொல்லாகமவினால்  ஞாயிற்றுக்கிழமை (22), கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.

கிழக்கு மாகாண சுற்றுலா சபை பணியகத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட கொழும்பை வசிப்பிடமாகக் கொண்ட  கோசல விக்ரமநாயக்க, கொழும்பில் ஒரு பிரதானமான வியாபாரி என்பதுடன், இலங்கை விமான சேவைகள் போக்குவரத்துச் சபையின் முன்னாள் பணிப்பாளரும், இலங்கை சுற்றுலா பணிப்பாளர் சபை உறுப்பினரும் ஆவார்.

அத்துடன், தற்போதைய சார்க் நாடுகளுக்கான சுற்றுலா சபையின்  கடந்த 2004ஆம் ஆண்டு தொடக்கம் இற்றை வரை உறுப்பினராகவும் சிறிய நடுத்தர வங்கியின் பணிப்பாளர் சபை உறுப்பினராகவும் இருந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X