Freelancer / 2023 மார்ச் 05 , மு.ப. 08:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
திருகோணமலை - கந்தளாய், 91ஆம் கட்டை ஜன சவி மாவத்தை பகுதியில் வீடொன்றில் புதையல் தோண்டிய மூவர் பொலிஸாரால் நேற்று மாலை (04) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர் .
திருகோணமலை பகுதியைச் சேர்ந்த வீட்டு உரிமையாளர் உட்பட மூவர் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அப்பகுதியில் வீடொன்றில் புதையல் தோண்டுவதாக கந்தளாய் புலனாய்வு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்ற போது வீட்டின் அடிப்பாகத்தில் 15 அடி வரை தொண்டிக் கொண்டியிருந்த போது மூவரை கைது செய்துள்ளதாக தெரிவிக்கின்றனர் .
தோண்டிய இடத்தில் மூன்று அலவாங்கு, ஒரு மண்வெட்டி, ஒரு சுத்தியல், ஒரு பிளாஸ்டிக் வாளி,கயிறு, நீர் இறைக்கும் இயந்திரம் மற்றும் மல்டி வயரும் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு கந்தளாய் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர் . R
51 minute ago
58 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
58 minute ago
3 hours ago