2025 மே 20, செவ்வாய்க்கிழமை

முதிரை மரக்குற்றிகளையும் வடிசாராய போத்தல்களையும் வைத்திருந்தவருக்கு விளக்கமறியல்

Thipaan   / 2016 ஜூன் 28 , மு.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீசான் அஹமட்

கந்தளாய் தலைமையகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காட்டுப்பகுதியில் சட்டவிரோதமாக முதிரை மரக்குற்றிகளையும் வடிசாராய போத்தல்களையும் வைத்திருந்த நபரை, எதிர்வரும் ஜூலை மாதம் 11ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட கந்தளாய் நீதிமன்ற நீதவான் எச்.ஜீ. தம்மிக்க, சட்டவிரோத வடிசாராய போத்தல் வைத்திருந்த குற்றச்சாட்டுக்கு 3500 ரூபாய் தண்டப்பணம் செலுத்துமாறும் உத்தரவிட்டார்.

கந்தளாய் காட்டுப்பகுதியில் சட்டவிரோதமாக வெட்டப்பட்ட 15 முதிரை மரக்குற்றிகளையும் 8 வடிசாராய போத்தல்களையும் வாகனத்தில் ஏற்றுவதற்கு தயாராக இருப்பதாக, கந்தளாய் சிறுகுற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், குறித்த காட்டுப்பகுதியில் சுற்றி வளைப்பினை மேற்கொண்ட போது, சந்தேகநபரொருவரைக் கைதுசெய்த கந்தளாய்ப் பொலிஸார், முதிரை மரக்குற்றிகளையும் வடிசாராயப் போத்தல்களையும் கைப்பற்றினர்.

கைது செய்யப்பட்ட, மெதசிறிகம பகுதியைச் சேர்ந்த 26 வயது நபரை, கந்தளாய் தலைமைய சிறுகுற்றத்தடுப்பு பொலிஸார், ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்து நேற்றுத் திங்கட்கிழமை கந்தளாய் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதையடுத்தே, நீதவான் மேற்கண்ட உத்தரவைப் பிறப்பித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X