2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

மூதூரில் சில பகுதிகளை சேருவில பிரதேச செயலகப் பிரிவுடன் இணைப்பதை தடுக்குமாறு கோரிக்கை

Suganthini Ratnam   / 2017 பெப்ரவரி 22 , மு.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடமலை ராஜ்குமார், பொன் அனந்தம்,

மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கங்குவேலி அகஸ்தியர் ஸ்தாபனம்,  முதலைமடு, படுகாடு ஆகிய பகுதிகளை சேருவில பிரதேச செயலகப் பிரிவுடன் இணைப்பதற்காக எடுக்கும் நடவடிக்கையை தடுத்து நிறுத்துமாறு மேற்படி பகுதிகளைச் சேர்ந்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நேற்று (22) மேற்படி மக்கள் அனுப்பி  வைத்துள்ள கடிதத்திலேயே, இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'மேற்படி பகுதிகளிலுள்ள காணிகளை யுத்த காலத்தில் அபகரித்து விவசாயம் செய்து வருமானம் பெற்று வந்த பெரும்பான்மையின விவசாயிகளில் சிலர், மேற்படி பகுதிகளிலுள்ள காணிகளை அபகரிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எனவே, இந்தக் காணிகளை அபகரிக்கும் செயற்பாட்டையும் தடுத்து நிறுத்துமாறு கோருகின்றோம்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X