Princiya Dixci / 2017 பெப்ரவரி 13 , மு.ப. 05:35 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஒலுமுதீன் கியாஸ், தீஷான் அஹமட், பொன் ஆனந்தம், அப்துல்சலாம் யாசீம், ஏ.எம்.ஏ.பரீத்
திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் அல்ஹிலால் மத்திய கல்லூரி பாடசாலையை மூடி பாடசாலை மாணவர்களும் ஆசிரியர்களும், மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர்க்கு எதிராக, ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 07 ஆம், திகதி, மூதூர் அல்-ஹிலால் மத்திய கல்லூரியில் இடம்பெற்ற கூட்டத்தில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு தொழுகைக்கான நேரம் வழங்கவில்லையெனவும், இது பற்றி பிரஸ்தாபித்த போது, தொழுகை முக்கியமில்லை, படிப்புதான் முக்கியம் எனவும் படிக்கிற மாணவர்களுக்கு மட்டும் படிப்பித்தால் போதும், படிக்காத மாணவர்களைக் கைவிடவும் என வலயக் கல்விப் பணிப்பாளர் தெரிவித்ததாக, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தி/ மூதூர் அல்-ஹிலால் மகா வித்தியாலயம் மற்றும் தி/ மூதூர் அந்தோனியார் மகா வித்தியாலய ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.
மேலும், இவ் ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜே.எம்.லாஹீரும் கலந்துகொண்டார்.


.jpg)
27 minute ago
41 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
41 minute ago
3 hours ago