2025 ஜூலை 28, திங்கட்கிழமை

முதலைக்கடிக்கு இலக்கானவர் வைத்தியசாலையில் அனுமதி

Thipaan   / 2016 செப்டெம்பர் 14 , மு.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுர்தீன் சியானா

மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தங்கநகர் பகுதியில் மாடுகளை மேய்த்து விட்டு, கிளிவெட்டி குளத்துக்குக் குளிக்கச்சென்ற நபரொருவர், முதலைக்கடிக்கு இலக்காகிய நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

செவ்வாய்க்கிழமை இரவு (13) இடம்பெற்ற இச்சம்பவத்தில், கிளிவெட்டி, தங்கநகர் பகுதியைச் சேர்ந்த ஜந்து பிள்ளைகளின் தந்தையான சிவப்பிரகாசம் தர்மலிங்கம் (52 வயது) இவ்வாறு முதலைக்கடிக்கு இலக்காகியுள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

கூலிக்காக மாடுகளை மேய்த்து வரும் ஜந்து பிள்ளைகளின் தந்தையான இவர், வழமைபோல மாடுகளை மேய்த்து விட்டு தனிமையாக குளித்துக்கொண்டிருக்கும் போது முதலை கடித்துள்ளது.

அவர் கதறிய சத்தத்தைக் கேட்ட பக்கத்து வயல் காரர்கள், அவரை மீட்;டு, மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து, மேலதிக சிகிச்சைகளுக்காக, திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அவர் மாற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X